Tamilnadu Shares : ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள்; பிணைய பத்திர ஏல விற்பனை செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு
tamil nadu government shares: 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தமிழ்நாடு அரசு ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்ரவரி 07, 2023 அன்று நடத்தப்படும்.
போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்கு உள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்கு உள்ளாகவும் நடைபெறும். இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தை (Electronic format) பிப்ரவரி 07, 2023 அன்று சமர்ப்பிக்க வேண்டும்’’.
இவ்வாறு நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.