TN guidelines from today | அமலானது புதிய கட்டுப்பாடுகள்.. கண்காணிப்பு தீவிரம்..
புதுச்சேரி தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் அதிகரித்து வருவதால், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. புதுச்சேரி தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி,
அனுமதிக்கப்பட்டுள்ளவை
1. மளிகை கடைகள் (50% வாடிக்கையாளர்களுடன்)
2. காய்கறி (50% வாடிக்கையாளர்களுடன்)
3.உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்)
5. திருமண நிகழ்வு (50 பேருக்கு மிகாமல்)
6. இறுதி ஊர்வலங்கள் (25 பேருக்கு மிகாமல்)
7. டாக்ஸி (ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள்)
8. ஆட்டோ (ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள்)
9. மின் வணிக சேவைகள்
10. தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி
11.இதர அனைத்து கடைகள் (உரிய வழிமுறைகளை பின்பற்றி)
அனுமதிக்கப்படாதவை
1. திரையரங்குகள்
2. உடற் பயிற்சி கூடங்கள்
3. கேளிக்கை கூடங்கள்
4. மதுக்கூடங்கள்
5. பெரிய அரங்குகள்
6. கூட்ட அரங்குகள்
7. பெரிய கடைகள்
8. வணிக வளாகங்கள்
9. அழகு நிலையங்கள்
10. சலூன்கள்
11. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள்
12. வணிக வளாகங்களில் இயங்கும் காய்கறி கடைகள்
13. வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு
14. விளையாட்டு பயிற்சி குழுமங்கள்
காலை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும்.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் அவசிய தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்குமாறும் இதுதொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.