![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamil Nadu Exit Poll 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்: ஏபிபி, இந்தியா டுடே, நியுஸ் 18, டிவி 9 கருத்து கணிப்புகள் - ஒரு பார்வை
Tamil Nadu Exit Poll Results 2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில், பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
![Tamil Nadu Exit Poll 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்: ஏபிபி, இந்தியா டுடே, நியுஸ் 18, டிவி 9 கருத்து கணிப்புகள் - ஒரு பார்வை Tamil Nadu Exit Poll Results 2024 Overall Survey DMK AIADMK BJP Seats Predictions TN Lok Sabha Election Tamil Nadu Exit Poll 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்: ஏபிபி, இந்தியா டுடே, நியுஸ் 18, டிவி 9 கருத்து கணிப்புகள் - ஒரு பார்வை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/01/d2b16832a151c28c7b664e6bc725e1381717253384305572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவைக்கான தேர்தல் இன்று மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன் என்பது குறித்து பார்ப்போம்.
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலானது, முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதியே நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.
பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள்:
தொகுதிகள் வாரியாக யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்:
கருத்து கணிப்பு நிறுவனங்கள் | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | பாஜக கூட்டணி |
ABP - C Voter | 37 முதல் 39 வரை | 0 -1 | 0-1 |
INDIA TODAY | 26 முதல் 30 வரை | 6 முதல் 8 வரை | 1 முதல் 3 வரை |
TV 9 | 35 | 0 | 4 |
CNN News 18 | 36 முதல் 39 வரை | 2 | 1 முதல் 3 வரை |
542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக இன்று வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
ஏபிபி - சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read:ABP-CVoter Exit Poll 2024 LIVE: மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக; சொன்னதைச் செய்த பிரதமர் மோடி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)