மேலும் அறிய

TN EB Bill Hike: மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன? - மின்வாரியத்தின் விளக்கம் இதோ

Tamil Nadu EB Bill Hike: தமிழகத்தில்  புதிய மின் கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Tamil Nadu Electricity Bill Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்ந்தபட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வால் சிறு,குறு தொழிற் நிறுவனங்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால்  உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மின் கட்டண உயர்வின் அவசியம் - மின் வாரியம் விளக்கம்

கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94.312 கோடி மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1.13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக மாநியாது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.4.588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது.

இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது.

TN EB Bill Hike: மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன? - மின்வாரியத்தின் விளக்கம் இதோ

மேலும், ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.

இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது, 01.04.2022 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அணைத்து மின்னிணைப்புகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வேயின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை 6:6/2024 -ஐ வெளியிட்டுள்ளது.

TN EB Bill Hike: மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன? - மின்வாரியத்தின் விளக்கம் இதோ

இந்த மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில். 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிஎண்.222-ன்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன் அடைவர்.

தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி வழிப்பாட்டுதலங்கள். மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5/- வரை மட்டுமே உயரும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15/- வரை மட்டுமே உயரும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- வரை மட்டுமே உயரும்.

TN EB Bill Hike: மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன? - மின்வாரியத்தின் விளக்கம் இதோ

இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.

2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு. குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.

விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு மட்டுமே உயரும். 25 காசுகள்

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும். மிக குறைந்த அளவில் யூனிட்

22.36 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15/- மட்டுமே உயரும்.

உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு பைசா 35 மட்டுமே உயரும்.

உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.

நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Sai Pallavi - Sivakarthikeyan  : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
Thug Life : மக்களே சம்பவம் லோடிங்... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் தக் லைஃப் அப்டேட்
Thug Life : மக்களே சம்பவம் லோடிங்... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் தக் லைஃப் அப்டேட்
Embed widget