மேலும் அறிய

Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 

சென்னையில் கிண்டி மருத்துவமனை மருத்துவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மருத்துவர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

சென்னையில் கிண்டி மருத்துவமனை மருத்துவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார். 

அதன்படி தற்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்று மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவர் மீதான தாக்குதலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது, அங்கு சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.  மேலும், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அவருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்கு சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் - அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இரவு - பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு கழக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
Embed widget