தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..
ஐ. டி. நிறுவனங்களுக்கு மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதமாக work from home அறிவிக்கப்படலாம். நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் இல்லா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாகவே சுகாதாரத்துறை வட்டார தகவல்களாக உள்ளன.
![தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை.. Tamil Nadu Covid Night Curfew announcement TN Covid-19 Restriction Guidelines தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/18/9b0c87ad279e8ba431bb2787441bde53_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகத்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துவுள்ளார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் கொரொனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,344 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1657 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 65,635 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
![தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/16/25bd5b01123d800f563627644b7f7e7c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=330)
முன்னதாக, கோவிட்-19 பரவலை தடுக்கும் விதமாக, கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி, மாவட்டங்களுக்கு இடையே அரசு பொது மற்றும் தனியார் பேருந்துகளிலும், சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளிலும் பயணிகள் நின்று செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. காய்கறி, மளிகை கடைகள், அனைத்து வணிக வளாகங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளில் இரவு 11 மணி வரை 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்தது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் வார இறுதி நாட்களில் பொது மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 16ம் தேதி, தமிழகத்தில் கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
![தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..](https://static.abplive.com/wp-content/uploads/2021/01/10010135/E-Palaniswami.jpg?impolicy=abp_images&imwidth=150)
இன்று எடுக்க கூடிய முக்கிய முடிவுகளில் என்னென்ன கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு இருக்கிறது ?
மற்ற மாநிலங்களான தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் 14 நாட்கள் தொடர் ஊரடங்கு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் நோய் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள பகுதியில் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்படலாம். அல்லது தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு விதிக்க வாய்ப்பு.
உணவகங்கள், கடைகள் திறப்பு நேரங்களை குறைக்க வாய்ப்பு. அரசு, மற்றும் தனியார் அலுவலகத்தில் 50% பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட வாய்ப்பு.
![தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா? முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..](https://static.abplive.com/wp-content/uploads/2020/03/31221114/work-from-home-getty.jpg)
ஐ. டி. நிறுவனங்களுக்கு மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் விதமாக work from home அறிவிக்கப்படலாம். நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் இல்லா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாகவே சுகாதாரத்துறை வட்டார தகவல்களாக உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)