Tamil Nadu Covid 19 : தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா- முதல்வர் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11, 094 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 909 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 026ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 29 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.7 0கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை:
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிய இங்கு பார்க்கவும்...
#TamilNadu | #COVID19 | 29 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 29, 2022
• TN - 1,827
• Total Cases - 34,73,116
• Today's Discharged - 764
• Today's Deaths - 0
• Today's Tests - 25,912
• Chennai - 771**#TNCoronaUpdates #COVID19India
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 27.06.2022#TNCoronaUpdate pic.twitter.com/tWDf2trjDl
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 28, 2022
Also Read: காஞ்சிபுரம் அருகே ரூ.6000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..! லஞ்சம் கேட்டது இதற்குதானாம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )