மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் அருகே ரூ.6000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..! லஞ்சம் கேட்டது இதற்குதானாம்..!
குணகரம்பாக்கம் கிராமத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ.6000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (45). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குணகம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மகா தேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரை நாடி உள்ளார். பட்டா மாற்றம் செய்து தருவதற்கு உதயகுமார் ரூபாய் 8000 லஞ்சம் கேட்டுள்ளார். இதில் 6000 பணம் தருவதாக தினேஷ் தெரிவித்துள்ளார். மேலும் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தினேஷ் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் அளித்த போது, மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் உள்ள முக்கிய ஆவணங்கள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குணகரம்பாக்கம், கிராமத்தில் பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் ரகசியமாக அவர் லஞ்சம் வாங்குவதை, கையும் களவுமாக பிடித்த ரசாயனம் தடவிய நோட்டுக்கள் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவது மற்றும் பொதுமக்கள் யாரும் , அரசு அதிகாரிகளுக்கு அவர்களுடைய பணிகளை செய்ய லஞ்சம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு அரசு அதிகாரிகள் யாராவது தங்களுடைய பணியை செய்வதற்கு லஞ்சம் கேட்டால் , மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரை அணுகுமாறு கேட்டுக் கொண்டனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion