TN Corona Cases : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 -க்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 பேருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 311 பேர் மரணமடைந்தனர்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 பேருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 311 பேர் மரணமடைந்தனர். 21, 317 பேர் குணமடைந்தனர். இன்று ஒரு நாள் மட்டும் 311 பேர் மரணமடைந்தனர். மொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,19,342-ஆகவும், மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 13,61,204-ஆக உள்ளனர்.
Tamil Nadu reports 33,181 new COVID-19 cases, 21,317 discharges, and 311 deaths in the last 24 hours
— ANI (@ANI) May 16, 2021
Active cases: 2,19,342
Total discharges: 13,61,204
Death toll: 17,670 pic.twitter.com/ASxwwhlQWL
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 66,812 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,172 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,51,17,215 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,008பேர் ஆண்கள், 14,173 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,56,543 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,41,635 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,317 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்தது. 311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 148 பேர் தனியார் மருத்துவமனையிலும், 163 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.