மேலும் அறிய

Tamil Nadu Corona Update | தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? குறைந்ததா மரண விகிதம்?

தமிழ்நாட்டில் இன்று 24 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 32 ஆயிரத்து 221 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 24 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 258 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 62 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Corona Update | தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? குறைந்ததா மரண விகிதம்?

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் கடந்த வாரங்களில் 7 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு 2 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 22 ஆயிரத்து 343 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 186 ஆக பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 12 லட்சத்து 78 ஆயிரத்து 486 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 94 ஆயிரத்து 227-ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 38-ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 13 ஆயிரத்து 448 ஆகும். பெண்கள் 10 ஆயிரத்து 957 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 221 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Nadu Corona Update | தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? குறைந்ததா மரண விகிதம்?

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 460 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 213 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 247 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 291 நபர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 107 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள். தமிழகத்தில் எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப மாவட்ட அளவில் தளர்வுகளை அளிக்கலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி., கடிதம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!

Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்

கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்

ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?

RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

Embed widget