Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
மாநிலம் முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, கோவையில் 1,089 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றைய, கொரோனா இறப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகைர்த்தது. 19,860 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று முற்றிலும் குறைந்த பின்னரே கோவில்கள் பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் இன்று 8 ஆயிரத்து 183 நபர்கள் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 18 ஆயிரத்து 232 நபர்கள் இன்று குணம் அடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 015 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இன்று 135 பேருக்கு கொரோனா
நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 135 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் டெல்லியில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 372 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலுங்கானாவில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு
தெலுங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக, வரும் 20-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த மாநில அமைச்சரவை இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அந்த மாநிலத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை முதல் தெலுங்கானாவில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2,832 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
அமைச்சர் மா.சுப்பிரமிணயன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளதால் தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 2 ஆயிரத்து 382 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 111 வரை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா மூன்றாவது அலை 6 - 8 வாரங்களுக்குள் தாக்கக்கூடும் - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை
எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில், இரண்டாவது அலையில் இருந்து மக்கள் எந்த பாடங்களையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இநத நிலையில், தவிரக்க முடியாத மூன்றாவது அலை நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கக்கூடும். இரண்டாவது அலையில் பாதிக்கப்படாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.