MK Stalin Speech: மலையாளத்தில் பேசி மாஸ் காட்டிய முதல்வர்.. கைத்தட்டல்களால் அதிர்ந்த கூட்டம்..!
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் 23 வது சிபிஎம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியவற்றை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
சிபிஎம் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அசத்தினார்.
சிபிஎம் மாநாட்டில் மலையாளத்தில் உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இந்தியாவின் போராட்ட வீரர்கள் பொதுவுடமை புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கண்ணூர். சிபிஎம் மாநாட்டில் மலையாளத்தில் உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இந்தியாவின் போராட்ட வீரர்கள் பொதுவுடமை புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கண்ணூர். கேரள மாநில முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகள். இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கும் இடம் கேரளா. ஒன்றிய மாநில உறவுகளைப் பற்றி பேச வந்திருக்கும் நான் தமிழ்நாடு. இதை விட பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், 356 பிரிவை பயன்படுத்தி கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். சிபிஎம் அரசாங்கத்திற்கு 1959 ஆம் ஆண்டு இது நடந்தது. இதே போல திமுகவும் 2 முறை கலைக்கப்பட்டது. 1976,1991 என இரண்டு முறை இது நடந்தது. ஆகையால் ஒன்றிய மாநில உறவுகளை பற்றி பேசுவதற்கான உரிமை சிபிஎம் மிற்கும், திமுகவிற்கும் உண்டு. மாநிலங்கள் காப்பற்றப்பட்டால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். சிலர் அரசியல் அரிச்சுவடை மாற்றுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பண்பாடு. ஆனால் இந்த வேற்றுமையை அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி ஆகி விடும். ஒரே ஆள் ஆகிவிடும். ஆனால் இது மிகவும் மோசமான நிலை.
கிராமங்களை மாநிலங்களை அழிக்கம் நினைப்பவர்களாக ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இது இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசு தனது அதிகார வரம்பை தாண்டி செல்கிறது. ஆங்கிலேயர்கள் செய்யாததை கூட ஒன்றிய அரசு செய்கிறது. பாஜக மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து, மக்களை பழிவாங்குகிறார்கள். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 21,000 கோடி ரூபாய் நிதி வரவேண்டி இருக்கிறது. ஆளுநர் வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியானதா..? நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும்.