TN Assembly Session LIVE: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்..
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
LIVE
Background
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் நேற்று. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்றும் சட்டபேரவை விவாதம் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி: பேரவையில் இருந்து வெளியேறியது அதிமுக..!
ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக வெளியேறியது.
ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தொழில்துறை பெயர் மாற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தொழில்துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு பரிசு - பேரவையில் அறிவிப்பு
தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்றும், அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையம் - தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை : நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.