மேலும் அறிய

ஆளுநர் உரையில் வார்த்தைகள் தவிர்ப்பு.. ஆளுநர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..

தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரையாற்றினார். அதில், ஆளுநருக்கு வரைவு உரையானது. தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம் ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல.

அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்

ஆகவே சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,

அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்வனத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். 

அப்போது ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்தநிலையில் அவரை கண்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதால் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுநர் புறக்கணித்த வார்த்தைகள்: 

  • அயலக தமிழர் நாள் என்று குறிப்பிட்ட நிலையில் விவேகானந்தர் பிறந்தநாள் என்ற வார்த்தையை சேர்த்து படித்தது உரையை திருத்துவதற்கு சமம்.
  • திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார்.
  • பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் படிக்கவில்லை.
  • சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகளையும் புறக்கணித்தார்.
  • சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நிலைநாடுவதால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.
  • வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வந்து தமிழாக இருக்கட்டும் என்ற கலைஞரின் மேற்கோளையும் ஆளுநரை புறக்கணித்தார்.
  • தமிழ்நாடு அரசு என்ற இடங்களில் எல்லாம் இந்த அரசு என்று ஆளுநர் படித்ததாக குற்றச்சாட்டு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
திமுகவை தூக்கி எறிய மக்கள் ரெடி! ஒரே குடும்பத்திற்கு செல்லும் ஊழல் பணம்.. பிரதமர் மோடியின் ஆவேச பேச்சு
EPS slams DMK:
EPS slams DMK: "கொள்கை தான் வேறு.. திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு! மோடி முன்னிலையில் சீறிய எடப்பாடி..
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? தேரோட்டம் எப்போது? முழு விபரம் இதோ! | Madurai Chithirai Festival
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? தேரோட்டம் எப்போது? முழு விபரம் இதோ! | Madurai Chithirai Festival
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget