மேலும் அறிய

TN Spurious Liquor: கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை; 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை..!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

கள்ளச்சாராய விற்பனையை தடுப்பு தொடர்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் டி ஜிபி சைலேந்திரபு,  விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி எஸ்பி  மோகன்ராஜ், செங்கல்பட்டு எஸ்பி  பிரதீப், கடலூர் எஸ்பி  ராஜாராம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் ஆட்சியர் பழனி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் ஜெகாவத்  ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

அதன் பின்னர், கள்ளச்சாராய விற்பனை தடுப்பு தொடர்பான விசாணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என விழுப்புரம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறினார். 

அப்போது பேசிய அவர், ”செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, க/பெ ராஜா (வயது 50). செல்வம், த/பெ செல்வம் (வயது 35), மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (வயது 65) மற்றும் சந்திரா. க/பெ வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையும். அதிர்ச்சியும் அடைந்தேன்.

இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Spurious Liquor: கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை;  4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை..!

இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு
சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் த.மோ அன்பரசன்  முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார்.
TN Spurious Liquor: கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை;  4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை..!

நேரில் ஆறுதல்

இதற்கு முன்னதாக விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Embed widget