மிக்சர் சாப்பிடும் தமிழ் ஹீரோக்கள்! பின்னணியில் ரெட் ஜெயண்ட்? திருப்புவனம் லாக்கப் மரணம்
திருப்புவனத்தில் விசாரணையின் போது இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏன் தமிழ் சினிமாவில் இருந்து ஒருவர் கூட ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஏன் கண்டன குரல் எழுப்பவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர் - நடிகைகளும் குரல் கொடுத்த நிலையில், திருப்புவனத்தில் விசாரணையின் போது இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏன் தமிழ் சினிமாவில் இருந்து ஒருவர் கூட ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஏன் கண்டன குரல் எழுப்பவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கு:
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவின் போது கடையை திறந்து வைத்திருந்தாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையுமே உலுக்கியது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதித்துப்போய் கண்டனக்குரல் எழுப்பினார்கள் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள்.
குரல் எழுப்பிய திரைப்பிரபலங்கள்:
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜிகாந்த் ஜூலை 1, 2020-ல், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட அனைவருக்கும் தகுந்த தணடனை கிடைத்தே ஆக வேண்டும் சத்தியாம விடவேக்கூடாது”என்று கடும் கண்டனத்தை பதிவாக வெளியி, செய்திருந்தார்.
நடிகர் கமல், “சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே! வழக்குப் பதிவு செய்க" என்று ஜூன் 29 ஆம் தேதி குரல் எழுப்பியிருந்தார்.
நடிகர் சூர்யா,” நீதி நிலை நிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜூன் 26-2020-ல் , ”பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை...
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு... இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி, சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்று ஜூன் 26,2020-ல் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன், ‘கொடுமையான குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு நிற்கவைத்து தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதியைக் கொடுப்பதன் மூலம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை கொடுக்கும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதோடு, நடிகர்கள், ராகவா லாரன்ஸ், கெளதம் கார்த்திக், விஷ்ணு விஷால்,சாந்தானு, ஹரிஷ் கல்யாண்,கார்த்தி, சிபி சத்யராஜ், இசையாமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, டி.இமான், கார்திக் சுப்புராஜ், பா. ரஞ்சித், அசோக் செல்வன் மற்றும் வைரமுத்து, கரு பழனியப்பன், நடிகைகள் ஹன்சிகா, பிரியாபவனி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், நிவேதா பெத்துராஜ், கீர்த்தி பாண்டியன், நிவேதா தாமாஸ் என்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை எதிர்த்து கேள்வி கேட்டது.
வாய் திறக்காமல் உள்ள நட்சத்திரங்கள்:
ஆனால் கடந்த சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்கள் அடித்தே கொன்ற விவகாரத்தில் இதுவரை சினிமாத்துறையில் இருந்து எந்த ஒரு கண்டனமும் ஆளும்
திமுகவிற்கு எதிராக வரவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் உதய நிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ன் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் நடிகர்- நடிகைகள் இன்னும் இந்த விவகாரத்தில் மெளனம் கலைக்காமல் இருக்கிறார்களா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






















