மேலும் அறிய

A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!

உலக வங்கியின் நிதியுதவியுடன், 8.23 கோடி ரூபாய் செலவில் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 1928 ஆம் ஆண்டு, தாம்பரம் சானடோரியத்தில் நிறுவப்பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையானது (GHTM), நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக காசநோய் (TB) மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது.

தாம்பரம் GH-க்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள்:

776 படுக்கைகளுடன் கூடுதலாக 120 படுக்கைகள் உள்ள மறுவாழ்வு மையத்தில், 31 வார்டுகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு தொற்று மற்றும் தொற்று அல்லாத நுரையீரல் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இந்த மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது.

இங்கு காசநோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் தளர்ச்சி, நுரையீரல் அழற்சி. திசு இடைநார் நுரையீரல் நோய்கள் (Interstitial lung Diseases), நுரையீரல் புற்றுநோய் (Lung Malignancies) மற்றும் பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் காசநோய் சிகிச்சைக்கான சிறந்த மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை (GHTM) இத்தகைய தீவிர சிசிக்கைகளுக்கு பயனளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அண்மைக் காலங்களில், இந்த மருத்துவமனை நாள்பட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் விரிவான சிகிச்சை அளிப்பதற்கு, அதிநவீன மறுவாழ்வு மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த மறுவாழ்வு மையம் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் டூ எரிவாயு இணைப்பு:

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, ஆண்டுக்கு சுமார் 1,60,000 வெளிநோயாளிகள், 15,000 உள்நோயாளிகள் மற்றும் 4,000 எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுடன், மாநிலத்தின் அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளை தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது.

உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் (TNHSRP) கீழ், 8.23 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மேம்பாட்டு பணிகளில், நுழைவு வளைவு, சுற்றுச்சுவர், மருத்துவமனை வளாகத்தின் உட்புற அணுகு சாலைகள், மழைநீர் வடிகால், அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி (Sump). தீயணைப்பு ஏற்பாடு முறைகள், மருத்துவ எரிவாயு இணைப்பு, மின்மாற்றி ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும்.

இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளானது தமிழ்நாட்டு மக்களுக்கு எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதி வழங்கிட வேண்டும் என்ற அரசின் உயரிய நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

 

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget