Vanniyar Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Vanniyar Reservation: உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம்(Supreme Court) இன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் பாமக, வன்னியர் அறக்கட்டளை உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பீ.ஆர்.கவாய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும் என்றும், சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடுகளை முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Supreme Court upholds the Madras High Court decision to quash a State quota law that provided a 10.5% special reservation to Vanniyars, a backward community in Tamil Nadu pic.twitter.com/dkljDXRnkw
— ANI (@ANI) March 31, 2022
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியில் வன்னியருக்கு 10.5% வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
#BREAKING | வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்புhttps://t.co/wupaoCQKa2 | #VanniyarReservation #SupremeCourt #TNGovt pic.twitter.com/mQiL01Gewe
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்