SC on R N Ravi: நீங்கள் செய்தது தவறு; ஆளுநர் ரவிக்கு குட்டு! - தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
முன்னதாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஆளுநர் செயல்பாடு நேர்மையாக இல்லை என தெரிவித்துள்ளது.
தீர்ப்புக்கு முன் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதில்,
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
- இந்த சட்டப்பிரிவின் கீழ் சுயேட்சையாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
- இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டப்படி தவறா? என முடிவு செய்ய வேண்டும்.
- மசோதாக்களை தான் நிறுத்தி வைக்காமல் குடியரசு தலைவர் முடிவு செய்ய ஆளுநர் அனுப்ப முடியுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
- மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும் தான் ஆளுநர் செயல்பட முடியுமா? அல்லது சுயேட்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
- கூடிய விரைவில் என்ற வாக்கியத்திற்கு என்ன பொருள்?
- மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
- ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது.
மேலும், “திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு ஆளுநர் ஏற்றிருக்க வேண்டும். 10 மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானது இல்லை. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநரால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.
மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும். மசோதாவை ஏற்பதா அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புவதா என்பதை ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தமிழக அரசின் ஆலோசனைப்படியே செயல்பட முடியும். சில பிரிவுகளில் ஒரு மாதத்திற்குள்ளும் சில பிரிவுகளில் 3 மாதத்திற்குள்ளும் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்” எனத் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.





















