மேலும் அறிய

The Kerala Story: ’தி கேரளா ஸ்டோரி’க்கு நாங்கள் தடை விதிக்கவில்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்..!

தமிழ்நாடு அரசு சார்பில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில்,  விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படத்தில் அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த மே 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாவதாக இருந்தது. அதனை தொடர்ந்து, மே 6ம் தேதி தமிழ்நாட்டிலும் ரீலிஸாக இருந்தது.

தி கேரளா ஸ்டோரி:

இந்த படம் வெளியாவதற்கு முன்பே  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இந்தியளவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அந்த சர்ச்சைக்குரிய ட்ரெய்லரில் லவ்ஜிகாத் என்னும் பெயரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு, அவர்கள் அதிகளவில் முஸ்லீம்கள் வாழும்  ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும், அந்த படத்தின் டைட்டில் கார்டில் இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து பலரும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தொடர்ந்து, ‘தி கேரளா ஸ்டோரி’க்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவை தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி படம் வெளியானது. 

தமிழ்நாட்டில் தடையா?

இந்தசூழலில் இது தொடர்பான மனுவை முன்னதாக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தி கேரளாஸ்டோரி படத்தின் ட்ரெய்லரை பார்த்து, இந்தப் படத்தில் எந்த ஒரு மதத்துக்கு எதிரான கருத்தும் இல்லை. இதற்கு சென்சார் போர்டும் திரையிட அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக இந்தப் படத்துக்கு தடை விதிக்க அனுமதி வழங்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மணு அவசர வழக்காக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஏன் தி கேரளா ஸ்டோரி தடை செய்யப்பட்டது கேள்வி எழுப்பினர். 

வழக்குப்பதிவு:

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கவில்லை, திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தலைநகர் சென்னை மற்றும் கோவையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனம், நடிகைகளின் நடிப்பு மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் அதிருப்தி காரணமாக மே 7ம் தேதியே படம் நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கிற்காக மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால், அபராதத்துடன் கூடிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget