Super Saravana Stores: ரூ.1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டில் அம்பலம்!
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினத்தில் நடந்த ரெய்டில் ரூ.1000 கோடி வருவாய் மறைத்தது அம்பலமாகியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜவுளி, நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளதாகவும், ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் கூறியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#BREAKING | சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வர ஏய்ப்பு செய்தது அம்பலம் - வருமான வரித்துறை https://t.co/wupaoCQKa2 | #Saravanstore | #Chennai | #ITRaid pic.twitter.com/CQJeqIdtfw
— ABP Nadu (@abpnadu) December 7, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்