TN Sunday Lockdown: தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் 23ஆம் தேதியும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 23ஆம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பயணிகள் ஆட்டோக்கள், வாடகை கார்களில் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும், ஏற்கெனவே முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு எனவும் அரசு கூறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் 23ஆம் தேதியும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும், அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு https://t.co/wupaoCQKa2 | #TNLockdown | #Corona | #TNGovt pic.twitter.com/NXC1cZtzYT
— ABP Nadu (@abpnadu) January 21, 2022
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில், கொரோளா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்
நாள்: 21.01.2022 வகையில் அரசு ஆணை எண்:300 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 12-1-2002-ன்படி கடந்த 16-1-202 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொது மக்கள் நலன் கருதிதொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைமுறைப் படுத்தப்பட்ட அதே அந்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயப்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்