Aathiparasakthi Amma: அப்போ பஞ்சாயத்து.. இப்போ கடவுள்.. திடீர் அம்மனை ரீவைண்ட் செய்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!
ஃபேஸ்புக்கை திறந்தாலே நம் கண்ணில் அடிக்கடி புலப்படும் ஒரு விஷயம் என்றால் அது புதிதாக அவதரித்துள்ள ஆதிபராசக்தி அம்மாவின் போஸ்டர்தான்
ஃபேஸ்புக்கை திறந்தாலே நம் கண்ணில் அடிக்கடி புலப்படும் ஒரு விஷயம் என்றால் அது புதிதாக அவதரித்துள்ள ஆதிபராசக்தி அம்மாவின் போஸ்டர்தான். அந்த போஸ்டரில் “அம்மாவின் திவ்ய தரிசனம். உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்துவிட்டாள். வாருங்கள் பக்த கோடிகளே.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல மாலைகளை அணிந்து அலங்காரத்தோடு இருக்கும் அந்த பெண்மணியின் புகைப்படமும் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது.
ஒரு சிலர் அந்த பெண்மணியை அம்மா... அம்மா என்று கண்ணீர் விட்டு வழிபட ஆரம்பித்துள்ளனராம். திடீரென தோன்றிய இந்த ஆதிபராசக்தி அம்மா யார் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியதோடு, போஸ்டரில் இருக்கும் எண்களுக்கும் போன் போட்டு வினா தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஆதிபராசக்தி அம்மா யார் என்பது குறித்த வீடியோ என்று நெட்டிசன்கள் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதாவது தனியார் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமக்கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியின் வீடியோதான் அது.
அந்த வீடியோவில் இன்று திடீர் கடவுளாக காட்சி அளிக்கும் பெண் திருமணத்தை மீறிய உறவு பஞ்சாயத்தில் சிக்குகிறார்.அவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ் செய்கிறார். மானத்தை இழந்து வாழலாமா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் அப்பெண், தனியா வாழ முடியவில்லை. துணை தேவைப்பட்டது என்பது போல் பதிலளிக்கிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பல்வேறு கமெண்ட்டுகளை தெரிவித்து கிண்டல் செய்து வருகின்றனர். பஞ்சாயத்து டூ கடவுளா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்