விழுப்புரம் : முதல் நாளே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பிய மாணவர்கள்.. நடந்தது இதுதான்..
விழுப்புரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடம் திறக்காததால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். எனவே தாமதமாக வந்த ஆசிரியர்களிடம் விளக்க கடிதம் தர அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடம் திறக்காததால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். எனவே தாமதமாக வந்த ஆசிரியர்களிடம் விளக்க கடிதம் தர அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து ஒரு மாத காலம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் சரிவர நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் 2019ம் ஆண்டுக்கு பின்னர் வழக்கம் போல் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இதையொட்டி பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில், விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று காலை 8 மணி முதல் மாணவ- மாணவிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வரத்தொடங்கினர். ஆனால் காலை 9 மணி வரையிலும் ஆசிரியர்கள் வராததால் பள்ளியின் நுழைவுவாயில் இருப்பு கேட் பூட்டிக்கிடந்தது.
திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!
இதனால் குழப்பமடைந்த மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வெளியே கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். அவர்களில் சில மாணவ- மாணவிகள் வீட்டிற்கு திரும்பிச்சென்றனர். பின்னர் காலை 9.5 மணியளவில் ஆசிரியர்கள் வந்து பள்ளியை திறந்ததும் மாணவ- மாணவிகள் வகுப்பறைக்குள் சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கமாக எழுதி தரும்படி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆசிரியர்கள் தாமதமாக வந்ததால் மாணவ- மாணவிகள் நீண்ட நேரம் வெளியில் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்