திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!
புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு வெளியேறினர்.
கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.
Chidambaram Temple : சிதம்பரம் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு..தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு..நடந்து என்ன?
Melmaruvathur Temple Encroachment : ஆக்கிரமிப்பில் மேல்மருவத்தூர் அடிகளார் மண்டபம்: நாளை அகற்றம்!
இந்த நிலையில், புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சரியாக சூர்யா வரும் காட்சியில் திரை தீப்பிடித்தது. இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு வெளியேறினர்.@abpnadu #Vikram pic.twitter.com/6dl4rUVHAv
— SIVARANJITH (@Sivaranjithsiva) June 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்