TN Fishermen Arrest: கதறும் தமிழக மீனவர்கள் - மீண்டும் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, தீர்வு எப்போது?
TN Fishermen Arrest: இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த, 8 மீனவர்களை கைது செய்துள்ளது.

TN Fishermen Arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்கள் பயன்படுத்திய 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாவர். அண்மையில் தான் காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு இதுவரை கிடைத்தபாடில்லை.
மீனவர்கள் பிரச்னைக்கு எப்போது தீர்வு?
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வின்போது, வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார். அதோடு, அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபரிடமும், தமிழக மீனவர்கள் மீதான தொடர் கைது நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சுமூகமான முடிவுகள் எடுக்கப்படும் என அவரும் உறுதியளித்தார். ஆனாலும், தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பது முடிந்தபாடில்லை. இதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி வீடு வருவார்களா? மாட்டார்களா? என்ற அச்சத்திலேயே மீனவ குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

