மேலும் அறிய

தேனாறும் பாலாறும் எங்கே? கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது - திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய இபிஎஸ்

“தேனாறும் பாலாறும் எங்கே? கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது என விழுப்புரம் கள்ளச்சாராயம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது என்றார்.  விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பினார். அரசின் மெத்தனத்தால் இன்று நாம் பல உயிர்களை இழந்திருக்கிறோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

எடப்பாடி பழைசாமி பேட்டி: மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவரக்ள் தெரிவிப்பதாகவும், சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான சம்பவம்.

விடியா ஸ்டாலின் அரசில் இரண்டு திட்டமும் கொண்டு வரவில்லை கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரே செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 18 பேரின் உயிரை இழந்துள்ளோம். போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி விற்பனை செய்கிறார்கள். 

அதிமுக ஆட்சியில் போலிமது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது இல்லை. இரண்டே நாளில் 1,600 பேர் கைது செய்யப்படுகிறார்கள். மது விற்பனை அரசுக்கு தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும். விலை மதிக்க முடியாத உயிரை இழந்துள்ளோம் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடுகிறது. இதற்கு ஆளும் கட்சி துணை போகின்றனர்.இதனை தடுக்க கூறியிருந்தோம். அதனை செய்யவில்லை.

பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள் ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள் துறை அமைச்சரை நீக்க வேண்டும். அரசாங்கமே மது பானம் அருந்த ஆதரவு கொடுக்கிறது. திருமணம் விளையாட்டு மைதானத்தில் மது பானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுகிறது.  செந்தில்பாலாஜி பத்து சதவிகிதம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு. சமூக போராளிகள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை அரசின் கைகூலியாக செயல்படுகிறார்கள். திமுகவின் கூட்டனியில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பரப்புரையா? விஜய் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் நெத்தியடி அறிக்கை!
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பரப்புரையா? விஜய் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் நெத்தியடி அறிக்கை!
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Embed widget