மேலும் அறிய

Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்

Annamalai Rajini: திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நேரடி ஆதரவில் தான், பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annamalai Rajini: வரும் ஜுன் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ள தனது பிறந்தநாளான்று, புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு..

அண்மையில் நடத்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மாநில அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளாக மாறி மாறி வந்த இரண்டு திராவிட கழகங்களும் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இளம் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவுடன், வெறும் இரண்டரை வயதான தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், பாஜக உள்நோக்கத்துடன் தனது மற்றொரு பிரிவாக அவரை முன்னிலைப்படுத்தி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை விஜய் Vs அண்ணாமலை என மாற்றம் செய்ய முயற்சித்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.

ரஜினியின் ஆதரவில் அண்ணாமலை..

மாநில அளவிலான தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், முக்கிய பொறுப்புகள் ஏதேனும் வழங்கப்படும் அல்லது தேசிய அளவில் முக்கிய பதவியை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத நிலையில், தனிக்கட்சி தொடங்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இவருக்கு பின்புலத்தில் இருந்து ரஜினி ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவிலேயே இருவருக்கும் இடையேயான நேரடி சந்திப்பும் நிகழ உள்ளதாம். அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்கவும் வாய்ப்புள்ளதாம். இந்த நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்துள்ளதாகவும், இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதன் முடிவில் புதுக்கட்சி தொடங்குவது குறித்த இறுதி முடிவை அண்ணாமலை எட்டுவார் என தெரிகிறது.

நேபாளம் ட்ரிப் ஓவர்

வழக்கமாக முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அண்ணாமலை ஆன்மீக பயணம் மேற்கொள்வது இயல்பாம். அந்த வகையில் முன்னதாக ரஜினி பாணியில் இமயமலைக்கு சென்று வந்தவர், இந்த முறை அண்மையில் நேபாளம் சென்று வந்துள்ளார். அதோடு வாழும் கலை தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீரவிசங்கரையும் அண்மையில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற இவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதாவது ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மூலமாக தான் ரீல் அண்ணாமலைக்கும், ரியல் அண்ணாமலைக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் விதமாகவே ரஜினியுடன் புகைப்படத்துடன் சேர்த்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்

”மக்கள் சக்தி இயக்கம்”

இதனிடையே, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கோவையில் கட்சிப் பணிகளை தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  பல இடங்களில்  'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரிலான போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை நிலைப்பாட்டையும், சமூக வலைதளம் மூலம் அண்ணாமலை கடுமையாக எதிர்த்து இருந்தார். தமிழகத்தில் பிரபலமான தேசியவாத முகமாக விளங்கும் இவர், கட்சியிலிருந்து விலகுவதற்கான முதல் அறிகுறி இது என்று கூறப்படுகிறது. தொடர்ந்ர்து நேற்று தனது காரில் இருந்த பாஜக கொடியையும் அவர் அகற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் பி டீம்?

பலவிதமான, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் பாஜகவால் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டமுடியவில்லை. திராவிட கட்சிகளும் பெரும் சவாலாக உள்ள நிலையில், புதிய ஆளுங்கட்சியான தவெகவும் பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம். இதன் காரணமாகவே நேரடியாக இல்லாமல், அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி அவரை பின்புறத்தில் இருந்து இயக்கலாம் என டெல்லி புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தங்களது பி டீம் ஆக அண்ணாமலையை இறக்க உள்ளதாகவும், அதற்காகவே திட்டமிட்டே கட்சியில் ஓரங்கட்டப்படுவதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். பாஜகவுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள ரஜினியின் ஆதரவு அண்ணாமலைக்கு கிடைப்பதும், மேற்குறிப்பிடப்பட்ட திட்டத்தை உணர்த்துகிறது என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
Embed widget