மேலும் அறிய

Chennai TTD: பிரம்மோற்சவ நிறைவு விழா.. சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு வழிபாடு.. திரண்ட பக்தர்கள்..

சென்னை வெங்கட் நாராயண சாலையி இருக்கு பெருமாள் கோயிலில் நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கோயிலில் பிரம்மோற்சவ நிறைவு விழா ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் பெருமாளுக்கு பல உற்சவங்கள் நடைபெரும். அதில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் தான். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் வெங்கடாஜலபதி பிறந்தநாள் அனுசரிக்கப்படுவதால் அந்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையான் பிரம்மதேவருக்கு தனக்கு உற்சவம் நடத்த சொல்லிக் கேட்டதாகவும், அதன்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் அனுசரிக்கப்படுகிறது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு செபடம்பர் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கருடகொடியேற்றத்துடன் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ வீதி உலாவின் போது வாகனங்களுக்கு சற்று முன்பாக பிரம்ம ரதம் என்று சிறிய தேர் இழுத்துச் செல்லப்படும். பிரம்மா இந்த தேரில் அமர்ந்து, பெருமாள் வீதியுலா வரும் மாடவீதிகளை சோதித்துப் பார்ப்பதாக ஐதீகம். அதன் பிறகே பெருமாள் இருக்கும் வாகனம் வீதியுலா செல்லும். இந்த வழக்கம் திருப்பதியில் மட்டுமே உள்ளது. மற்ற கோயில்களில் சீவேலி என்ற சிரிய பல்லக்கில் சக்கரத்தாழ்வார் விற்றிருப்பார் அந்த வாகனம் தான் பெருமாள் அவதார வாகனத்திற்கு முன் செல்லும்.

இப்படி ஒவ்வொரு நாளும் பெருமாள் அவதாரங்கள் எடுத்து வீதியுலா செல்வது வழக்கம். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது திருக்கொடி ஏற்றம், திருக்கொடி இறக்கம், மரத்தாலான பெரிய தேரோட்டம் ஆகியவை நடைபெறாது. எனினும் இவ்விழாவும் ஒன்பது நாட்களே நடைபெறுகிறது. ஆனால் அதேசமயம் தங்கத் தேரோட்டம் மட்டும் நடைபெறும்.

இன்று நவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளாகும். இன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில், சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள  திருப்பதி தேவஸ்தான கோவிலில் வருடாந்த பிரம்மோத்ஸவ நிறைவை ஒட்டி ஸ்ரீ பகவான், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் அபிஷேகமும், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜையும், புதிதாக உருவாக்கப்பட்ட புஷ்கரணியில் தீர்த்தவாரி சடங்குகளும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.

பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தீர்த சடாரியும் பிரசாதமும் வழங்கப்படும். திருப்பதி சென்று திருவேங்கடமுடையானை தரிசிக்க இயலாதவர்கள் சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் இருக்கும் பெருமாளை தரிசித்தால் போதுமானது. ஏனென்றால் திருப்பதி இருக்கும் வெங்கடாசலபதி தான் இங்கும் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வது திருப்பதிக்கே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு சமம் என நம்பப்படுகிறது.

Ayudha Poojai: களைக்கட்டும் ஆயுத பூஜை.. சிறப்பம்சங்கள் என்ன? பூஜைக்கான நல்ல நேரம் எப்போது? முழு விவரம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
Tamilnadu Roundup: விஜய் பரப்புரை மீண்டும் ரத்து.. வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: விஜய் பரப்புரை மீண்டும் ரத்து.. வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
US Iran Peace Talk:
US Iran Peace Talk: "எங்ககிட்ட விளையாடாதீங்க!" - ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் கொடுத்த 'வெயிட்டான' வார்னிங்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!

Embed widget