மேலும் அறிய

Ration Card Special Camp : ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... மிஸ் பண்ணாதீங்க- நாளை சூப்பர் சான்ஸ்.! அரசு அசத்தல் அறிவிப்பு

Ration Card Special Camp: மலிவான விலையில் உணவுப்பொருட்களை பெறுவதற்கும், அரசின் உதவித்தொகை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை செய்ய நாளை சூப்பர் வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உணவுப்பொருட்களானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2.27 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 2.23 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் பரிசு தொகுப்பும், வெள்ள பாதிப்பு காலத்தில் நிவாரண உதவியும் பெறவும்,  மகளிர் உரிமை தொகை ரூ. 1000 பெறுவதற்கும் ரேஷன் கார்டுகளை அடிப்படை ஆதாரமாக வைத்து வழங்கப்படுகிறது. 

 புதிய ரேஷன் கார்டுகள்

எனவே ரேஷன் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு தினமும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 21 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 98.23% ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கார்டுகள் அச்சிடும் பணியானது நடைபெற்று வருகிறது.

மேலும் புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு தமிழக அரசின் tnpds என்ற இணையதளத்தில் ஒரு சில நிமிடங்களில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகளில் பெயர்களை மாற்றம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பெயர்களை சேர்க்க மற்றும் நீக்க அசத்தல் வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

நாளை சிறப்பு முகாம்

இதன் படி தமிழகம் முழுவதும் நாளை பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் (24.01.2026) இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் உணவு பொருட்கள் துறை அதிகாரிகள் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனால் ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக மேற்கொள்ள வாய்ப்பானது உருவாகியுள்ளது.அந்த வகையில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget