Train Cancellation: இன்று 6 விரைவு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு.. முழு விவரம்
இன்று 6 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் வட கடலோர தமிழகம் வழியாக கடந்து சென்றது. வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரயில்வே வழித்தடங்களிலும் மழைநீர் இடுப்பளவு தேங்கியது. பல ரயில் நிலையங்களில் ப்ளாட்பாரம் உயரத்திற்கு மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, மின்சார ரயில்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை டிசம்பர் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவையை முழுவீச்சில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில்கள் மட்டுமல்லாமல் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் என அனைத்து சேவைகளும் மெல்ல மெல்ல தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்கள்:
- வண்டி எண்: 06061; தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
- வண்டி எண்: 06064; தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
- வண்டி எண்: 22652; பாலக்காடு – டாக்டர் செண்ட்ரல் வரை செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
- வண்டி எண்: 06062; நாகர்கோவில் – மங்களூரு சந்திப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
- வண்டி எண்: 06065; மங்களூரு – தாம்பரம் வரை இயங்கும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வண்டி எண்: 06063; மங்களூரு – தாம்பரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
மேலும் வண்டி எண் 12269 டாக்டர் எம்.ஜி.ஆர் செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் நிசாமுதீன் டுரண்டோ விரைவு ரயில் 6 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்பட்டது.
முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில், காரைக்காலி் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில், மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மன்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில், காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் மெல்ல மெல்ல விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake: மிக்ஜாமை தொடர்ந்து செங்கல்பட்டை பதற வைத்த நில அதிர்வு - ஆம்பூரிலும் உணரப்பட்டதாக தகவல்