மேலும் அறிய

TN Smart City: ஸ்மார்ட் சிட்டி வேலை நடக்கல.. நிதி எங்கே? காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை - எச்சரித்த முதல்வர்!

ஸ்மார்ட் சிட்டி அனுபவமே இல்லாத அந்த கம்பெனிக்கு சென்னை மாநகரத்தின் ஸ்மார்ட் சிட்டி மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் டெண்டர் ஏற்கெனவே எப்படி வழங்கப்பட்டது? - 2018ல் மு.க ஸ்டாலின் கேள்வி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று அதிமுக ஆட்சியில் செய்தது என்ன? என தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், உரிய விசாரணை நடத்தி ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.   

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த 2015ம் அண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை துவக்கி வைத்தது. மாநகர்வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிலையான, சுகாதாரமான சுற்றுச்சூழலுடன் இதற்கான பயன்பாட்டுச் செயல் வடிவில் (ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ்) வழங்கிடுவதே இத்திட்டத்தின் நோக்கம். தங்கள் அன்றாட வாழ்வில் மனதுக்கு உகந்த ஏற்புடைய வாழ்க்கைச் சூழலில் மக்கள் வாழ்ந்திட இது வகை செய்கிறது.  

சீர்மிகு (ஸ்மார்ட்) நகரத்திட்டப்பணியின் கீழ் 100 நகரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து  திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கோயம்புத்தூர்,மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட 11  மாநகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

ஸ்மார்ட் சிட்டி குற்றச்சாட்டு:   

முன்னதாக, எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க ஸ்டாலின், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத மெட்டல் ஷீட் தயாரிக்கும் நிறுவனத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணவப்போக்குடன் செயல்படுகிறது.


TN Smart City: ஸ்மார்ட் சிட்டி வேலை  நடக்கல.. நிதி எங்கே? காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை - எச்சரித்த முதல்வர்!

அதுமட்டுமின்றி, இப்போது பத்திரிகைகளையும் ஊழல் செய்திகளை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதும், எச்சரிப்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள பேராபத்து என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் டெண்டரில் (Integrated Command and Control centre) பங்கேற்ற ஏஸ்டெக் மெஷினரி (ACE TECH - அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது )காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி இதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதையும் செய்த முன் அனுபவம் இல்லை என்பது அந்தக் கம்பெனியின் இணையதளம் மூலமே தெளிவாகத் தெரிகிறது.

அந்த தனியார் கம்பெனியின் இணையதளத்தில் இயந்திரங்கள் தயாரிப்பது தான் எங்களது முக்கியமான தொழில் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி அனுபவமே இல்லாத இந்த கம்பெனிக்கு சென்னை மாநகரத்தின் ஸ்மார்ட் சிட்டி மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் டெண்டர் ஏற்கெனவே எப்படி வழங்கப்பட்டது?

அந்த முறைகேடு போதாது என்று டுபிட்கோ டெண்டரில் உள்ள பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னணு நிர்வாகம் தொடர்பான ஒப்பந்தங்களையும் இந்த தனியார் கம்பெனிக்கே கொடுக்க அமைச்சர் இப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான் ஊழலின் உச்சகட்டம். பத்து ஸ்மார்ட் சிட்டி டெண்டரைப் பொறுத்தமட்டில் கேரள மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனம் தான் விலை குறிப்பிட்டதில் (“ரேட் கோட்” பண்ணியதில்) இரண்டாவதாக வந்திருக்கிறது. ஆனால், அமைச்சரின் இந்த பினாமி கம்பெனி ஏன் டெண்டரை டெண்டர் கமிட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருகிறது?

அந்தக் கோரிக்கையின் பின்னணியிலும், அந்த டெண்டரில் இந்த தனியார் கம்பெனிக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் தான், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் டுபிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அப்பட்டமான ஊழல், ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் பொங்கி வழிகிறது. குறைந்த ரேட் கொடுத்துள்ள கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்ற டெண்டர் சட்ட விதிகளை மீறி, அதிக ரேட் போட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் இவ்வளவு குளறுபடிகளை அமைச்சர் திட்டமிட்டு நடத்துகிறார்.

ஆனால், ஊழலுக்கு பதில் சொல்ல முடியாத உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பத்திரிகைகளை, செய்தி போடக்கூடாது என்று மிரட்டுவது கோழைத்தனமாகும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி பணிகள் படு மோசமாக முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. இந்த லட்சணத்தில் மெட்டல் சீட் கம்பெனிக்கு மின்னணு நிர்வாகம் தொடர்பான ஸ்மார்ட் சிட்டி பணிகளை வழங்க அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நடத்தும் 'ஊழல் திருவிளையாடல்கள்' சந்தி சிரிக்கிறது.

நகராட்சிப் பணிகள், எல்.ஈ.டி. கான்டிராக்டுகள் அனைத்தும் அமைச்சரின் பினாமிகளுக்கோ அல்லது அவரது பினாமிகள் இடம்பெற்றுள்ள கம்பெனிகளுக்கோ கொடுக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சித் துறை எல்லாம் அமைச்சர் வேலுமணிக்கே சொந்தமான தனியார் லிமிடெட் கம்பெனிகள் போல் மாற்றப்பட்டுள்ளன.

 


TN Smart City: ஸ்மார்ட் சிட்டி வேலை  நடக்கல.. நிதி எங்கே? காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை - எச்சரித்த முதல்வர்!

சென்னை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தும் கான்டிராக்ட் உள்ளாட்சித் துறை அமைச்சரின் இந்த பினாமி தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட கோவை மாநகராட்சியில் கொத்துக் கொத்தாக அமைச்சர் வேலுமணி பினாமிகளின் ஊழல்கள் கரம் கோர்த்து அணிவகுத்து நிற்கின்றன.

ஸ்மார்ட் சிட்டியைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு 50 சதவீத நிதியும், மாநில அரசு 50 சதவீத நிதியும் செலவழிக்கிறது. ஆகவே, மத்திய அரசு நிதி செலவிடப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்தியில் உள்ள பாஜக அரசும் ஏன் தட்டிக் கேட்காமல் இருக்கிறது?

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அமைதி காப்பது ஏன்? ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமரின் முன்னோடித் திட்டமாக இருந்த போதிலும் இத்திட்டத்தைக் கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாக எழுகின்றன.

ஆகவே, நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தபடி நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் டுபிட்கோ ஸ்மார்ட் சிட்டி டெண்டர் மட்டுமின்றி, அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் இதுவரை விடப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களையும் விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, அமைச்சர் வேலுமணி மீதும், அவருக்குத் துணை போன ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே, தன் துறையில் தன் உறவினருக்கே கான்டிராக்டுகளை வழங்கிய ஊழல் வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருக்கும் முதல்வரால், அமைச்சர் வேலுமணியின் துறை டெண்டர்களை விசாரிக்க முடியாது என்றால், மத்திய அரசு நிதியும் இதில் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 


TN Smart City: ஸ்மார்ட் சிட்டி வேலை  நடக்கல.. நிதி எங்கே? காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை - எச்சரித்த முதல்வர்!

 

அதிமுக அரசு விளக்கம்: 

31.08.2018 அன்று இதற்கு விளக்கமளித்த அப்போதைய அதிமுக அரசு,

தொழில்நுட்பத் தகுதி பெற்ற மூன்று நிறுவனங்களான எல் & டி நிறுவனம், மெட்ராஸ் செக்யூரிடி பிரிண்டர்ஸ் நிறுவனம் மற்றும் கெல்ட்ரான் நிறுவனத்திற்கு அழைப்புகள் கொடுக்கப்பட்டு, 4.6.2018 அன்று இந்நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி விதிகளின்படி செயல்படுத்த வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும், ரிப்பன் மாளிகையில் காட்சிப்படுத்தி (Proof of Concept), அவை தொழில் நுட்பக் குழுவின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் இந்நிறுவனங்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது.

இதன் பின்னரே, விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த, தொழில் நுட்பம் மற்றும் விலைப்புள்ளிகளின் அடிப்படையில், குறைந்த ஒப்பந்தப்புள்ளி விலைவிகிதம் அளித்த ஒப்பந்ததாரரான திருவாளர் கெல்ட்ரான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. திருவாளர்கள் கெல்ட்ரான் நிறுவனம் கேரள மாநில அரசு சார்ந்த நிறுவனமாகும். அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த ஒப்பந்தப்புள்ளி கெல்ட்ரான் நிறுனத்திற்கு வழங்கப்பட்டது.

TN Smart City: ஸ்மார்ட் சிட்டி வேலை  நடக்கல.. நிதி எங்கே? காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை - எச்சரித்த முதல்வர்!

கெல்ட்ரான் நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO), தேவையான மின்னணுத் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. மேலும், கொல்கத்தா மெட்ரோ இரயில் திட்டம், கேரள மாநில காவல்துறை, புனே மாநகராட்சி முழுமைக்குமான கண்காணிப்பு மின்னணுத் தொழில்நுட்ப மற்றும் இயந்திரங்களையும், இந்திய கடற்படைக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் வழங்கியுள்ளது. மின்னணுத்

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற கெல்ட்ரான் நிறுவனம் பன்முக தன்மை பெற்ற ACE Tech, நிறுவனத்துடன் ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்குட்பட்டு, கூட்டமைப்பு ஏற்படுத்தி, இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்டது. இந்த கூட்டமைப்பில், கெல்ட்ரான் நிறுவனமே முக்கிய பங்கு நிறுவனமாகும். இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல், இது குறித்த எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளாமல், மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசின் மீது குறை கூற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கம் போல் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சுமத்தி உள்ளார் என்று தெரிவித்தது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget