Siddharth Summoned: அவதூறு கருத்து விவகாரத்தில் சித்தார்த்துக்கு சம்மன் - சென்னை காவல் ஆணையர்
சம்பவம் நடந்த சில தினங்களில் டீவீட்டை நீக்கிவிட்டு, ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டார் சித்தார்த். சித்தார்த்தின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சாய்னா பதில் கடிதம் எழுதினார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில், நடிகர் சித்தார்த்திடம் இருந்து வாக்குமூலம் பெற சம்மன் அனுப்பி இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் திவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
சாய்னாவின் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார். இறகுப்பந்து என்பதற்கு ஷட்டில்கார்க் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதனை நகைச்சுவையாக, கேலி செய்யும் விதமாக "சப்ட்டில் காக்(Subtle Cock)" என்று ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். காக் என்றால் ஆண்குறி என்று ஒரு அர்த்தம் ஆங்கிலத்தில் உள்ளது. ஆபாசமான வார்த்தைகள் கூறியதாக ட்விட்டரில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சம்பவம் நடந்த சில தினங்களில் அவர் பதிவிட்ட டீவீட்டை நீக்கிவிட்டு, ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டார் சித்தார்த். சித்தார்த்தின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சாய்னா பதில் கடிதம் எழுதினார். எனினும், சித்தார்த் மீது ஹைதராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் திவால், இரு புகார்கள் தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனவும், கொரோனா காலம் என்பதால், எந்த முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்