Actress Shobana | நாட்டிய கலைஞர், நடிகர் ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று.. ட்விட்டரில் அவரது அட்வைஸ் இதுதான்..
நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
நடிகரும், நாட்டியக் கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
நாடு முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 13,000 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
கொரோனாவின் அச்சம் ஒருபக்கம் என்றால் ஒமிக்ரான் வைரஸின் பரவலும் அதிகரித்துள்ளது. இதுவரை 70க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#TamilNadu | #COVID19 | 10 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 10, 2022
Today/Total - 13,990 / 28,14,276
Active Cases - 62,767
Discharged Today/Total - 2,547 / 27,14,643
Death Today/Total - 11 / 36,866
Samples Tested Today/Total - 1,35,266 / 5,86,62,798***
Test Positivity Rate (TPR) - 10.3%#TNCoronaUpdate #TN pic.twitter.com/DuOKqriFjU
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் ஒமிக்ரான் தாக்குவதால் மக்கள் எச்சரிக்கையாக வேண்டுமென்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களுக்கும் கொரோனாவும், ஒமிக்ரானும் உறுதியாகிவருகின்றன. நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. Hate being alone. So keep me entertained for the next 5 days. N get tested if any signs 🥰
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022
இந்நிலையில் நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், “போதிய முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கால்களில் வலி, குளிர், தொண்டை வலியாக இருந்தது. இது முதல் நாள்தான். அடுத்தடுத்த நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிட்டது. நல்ல வேளை நான் 2 தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். அதனால் பாதிப்பு குறைவாக இருந்தது.
எனவே, அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வேரியன்ட்டுடன் பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்