Tamilnadu billionaires : இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் ஐந்து தமிழர்கள் இவர்கள்தான்..
இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் தங்கள் மொத்த நிகர சொத்து மதிப்பை 775 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளனர்.
![Tamilnadu billionaires : இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் ஐந்து தமிழர்கள் இவர்கள்தான்.. Shiv Nadar sridhar vembu kalanithi maran 5 tamilnadu billionaires appear on Forbes 2021 INDIA'S RICHEST NET WORTH Tamilnadu billionaires : இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் ஐந்து தமிழர்கள் இவர்கள்தான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/f3beeecc3c41e72d34a96220de5a3ca7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா இரண்டவாது அலையில் எண்ணற்ற இந்தியர்கள் வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கும் நிலையில், இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் தங்கள் மொத்த நிகர சொத்து மதிப்பை 775 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளதாக டோர்பாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் 97.5 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் அனில் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 5 செல்வந்ததார்கள் இடபெற்றுள்ளனர்.
அவர்களின் விவரம் பின்வருமாறு:
ஷிவ் நாடார்: எச். சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக நிர்வாக இயக்குநராக இருந்த சிவ நாடார், அந்த பொறுப்பிலிருந்து கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். தற்போது, 76 வயதாகும் சிவ நாடார் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் உள்ளார். இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது. 1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியைத் தொடங்கினார்.
2021 ஆம் ஆண்டு இவரின் நிகரச் சொத்து மதிப்பு 31.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஓராண்டில், இவரின் சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், முதல் நூறு செல்வந்தர்களின் பட்டியலில் ஐந்தவாது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
முருகப்பா குடும்பம்: முருகப்பா குடும்பம் (Murugappa family) என்பது இந்தியாவின் முருகப்பா குழுமம் என்ற பல் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவர்களின் குடும்ப நிறுவனமான முருகப்பா குழுமம் சைக்கிள், சர்க்கரை, உரம், உற்பத்தி என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த குடும்பத்தின் நிகரச் சொத்து மதிப்பு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
ஸ்ரீதர் வேம்பு: பன்னாட்டு நிறுவனமான சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார். 2009-இல் நுகர்வோர் தொடர்பு மேலான்மைக்கான சோஹோ மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். குடிமக்களுக்கு இந்திய அரசு வழகும் நான்காவது உயரிய பத்மஸ்ரீ விருதை 2021-ஆம் ஆண்டில் பெற்றவர். இந்திய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2021-இல் இந்தியப் பணக்காரர்களில் 3.75 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 53வது பணக்காரராக உள்ளார்.
அமால்கமேஷன்ஸ் குழுமம்: இந்தியாவின் ஆகப் பெரிய இலகு பொறியியல் குழுமமாக அமால்கமேஷன்ஸ் இருக்கிறது. சொத்து மதிப்பு 2.89 பில்லியன் டாலர் ஆக இந்த குழுமத்தின் கீழ் 41 நிறுவனங்கள் இயங்குகின்றன.இதில், மிகவும் பிரசித்தி பெற்றதாக TAFE. நாட்டில் தனியார் வசம் இருக்கும் பெரிய நிறுவனக் குழுமங்களில் இதுவும் ஒன்று. 2021-இல் இந்தியப் பணக்காரர்களில் 2.89 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 73வது பணக்காரராக இது உள்ளது. பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் இந்த குழுமத்துக்கு தலைமை தாங்குகிறார்.
![Tamilnadu billionaires : இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் ஐந்து தமிழர்கள் இவர்கள்தான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/02cc4b944659f923ea871dd2e3a81bd3_original.jpg)
கலாநிதி மாறன்: பிரபல சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன் இந்திய பணக்கார்கள் பட்டியலில் 78வது இடம் பிடித்துள்ளார். 2021-இல் இந்தியப் பணக்காரர்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 78வது பணக்காரராக சன்குழுமம் உள்ளது.மொத்தம் 33 சேனல்களை கொண்டுள்ள சன் குழுமம் இந்தியாவில் 95 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பார்ப்பதாக சொல்லப்படுகின்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)