மேலும் அறிய
Minister Senthil Balaji : 'அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ஏன்?' கைதுக்கான காரணத்தை அடுக்கிய அமலாக்கத்துறை..
செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் ஆதாரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் ஆதாரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில..
வருமான வரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம் மிக அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில் ரூ. 1.34 கோடி டெபாசிட்டாக உள்ளது எனவும், செந்தில் பாலாஜி மனைவில் மேகலா பெயரில் வங்கியில் ரூ. 29.55 லட்சம் டெபாசிட்டாகியுள்ளது எனவும், பலமுறை விசாரணைக்கு அழைத்தும் வராமல் வாய்தா வாங்கினார் செந்தில்பாலாஜி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் நியமனம் தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















