இலங்கை சிறையில் தப்பிய கைதிகள் இந்தியா வர வாய்ப்பு; கடலோர பாதுகாப்பு ‛அலர்ட்’
இந்திய கடற்படையினர் மற்றும் தமிழக கடலோர காவல் படையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கடலூர் : இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி உள்ளது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கை சிறையில் இருந்து குற்றவாளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு தப்பியவர்கள், படகு மூலம் அகதிகள் போன்று தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Karur Mayor Kavitha Inspection | ”இது மார்க்கெட்டா? பஸ் ஸ்டாண்டா?” அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மேயர்
மேலும் வேறு பயங்கரவாதிகளும் வர வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இதனால் கடலோர காவல் பணியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய கடற்படையினர் மற்றும் தமிழக கடலோர காவல் படையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து கடலூர் கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் கடலில் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடலோர காவல்படை காவல் ஆய்வாளர் சங்கீதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் விவேகானந்தன், தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ரமேஷ், காவலர் புஷ்பநாதன் உள்ளிட்ட போலீசார் கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்களில் உள்ள கடலோர பகுதியில் நவீன படகில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி படகுகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
Ponmudi Speech : ”இந்தி படிச்சா.. கோயம்பத்தூரில் பானி பூரி தான் விற்கலாம்” அமைச்சர் பொன்முடி!
மேலும் அண்ணிய படகுகள் மற்றும் அறிமுகமில்லாத அன்னிய நபர்கள் யாரும் கடல் வழியாக ஊடுருவி வருகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். அதுபோல் மீன் பிடிக்கச்செல்லும் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களிடமும் கடலுக்குள் சந்தேகப்படும்படியான நபர்களையோ, புதிய படகுகளையும் கண்டால் உடனடியாக கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மீனவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்