Schools Leave 30th Nov: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழையால் தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
#BREAKING | திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்https://t.co/wupaoCQKa2 | #TNSchools | #TNRains pic.twitter.com/ttzIwsW7ze
— ABP Nadu (@abpnadu) November 29, 2021
#BREAKING | காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் https://t.co/wupaoCQKa2 | #TNSchools | #TNRains | #Kanchipuram pic.twitter.com/VeeGh8VMhr
— ABP Nadu (@abpnadu) November 29, 2021
#BREAKING | செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் https://t.co/wupaoCQKa2 | #TNSchools | #TNRains pic.twitter.com/piDnxGqgry
— ABP Nadu (@abpnadu) November 29, 2021
முன்னதாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வருகின்ற 3 ம் தேதிக்கு பிறகு குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்வும், தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்