இருந்ததே கொஞ்ச நாள்தான்... பீஸ்ஸ எங்க அம்மாகிட்ட கொடுத்துடுங்க ப்ளீஸ்... வெளியான ஸ்ரீமதியின் கடைசி கடிதம்!
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி கடைசியாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது கிடைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.
தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜூலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி கடைசியாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது கிடைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. அந்த கடிதத்தில்,” நான் நல்லாதான் படிப்பேன். கெமிஸ்டிரில நிறைய ஈக்குவேஷனா இருக்கு. எனக்கு ஈக்குவேஷன படிக்கவே வராது. அதனால கெமிஸ்டிரி மிஸ் என்னைய ரொம்ப ப்ரஷர் பண்றாங்க.
ஒரு நாள் கெமிஸ்டிரி மிஸ் நான் படிக்கவே மாட்டிக்குறேன்னு மேக்ஸ் மிஸ்கிட்ட சொல்லிடாங்க. அவங்களும் என்ன ப்ரஷர் பண்றாங்க. ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றன்னு ரொம்ப திட்டிடாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் படிக்கவே மாட்டிக்குறேன்னு இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் போய் எல்லா மிஸ்கிட்டையும் ஒழுங்காவே படிக்கமாட்டிக்குறான்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு காலைல க்ளாஸ்க்கு வந்த ஸ்டாஃப் என்ன ஒழுங்காவே படிக்க மாட்டிக்குற விளையாட்டுதனமா இருக்கன்னு சொல்லிடாங்க. கெமிஸ்டரி மிஸ்ஸும், மேக்ஸ் மிஸ்ஸும் என்ன ரொம்ப ப்ரஷர் பண்றாங்க. மேக்ஸ் மிஸ் என்ன மட்டும் இல்ல எல்லாரையும் டார்ச்சர் பண்றாங்க.
சாந்தி மேடம் உங்களுக்கு ஒரு ரெக்யூஸ்ட் வைக்குறேன். நான் இந்த வருஷம் கட்டுண ஸ்கூல் பீஸ் மட்டும் எங்க அம்மாகிட்டையே திருப்பி கொடுத்துருங்க. புக் பீஸ், ஹாஸ்டல் பீஸ்ஸும் கொடுத்துருங்க. ஏன்னா நான் இங்க இருந்ததே கொஞ்ச நாள்தான். ப்ளிஸ் மேடம்".
"I Am sorry Amma I Am Sorry Appa, ETC..." என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்