மேலும் அறிய

மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு

திருநங்கைகள் என்றாலே ஓடி ஒளிந்த காலம் மாறி தற்போது மிடுக்குடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது - நடிகர் சூரி

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நாளை  நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை மறுநாள்  தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான திருநங்கைகள்  விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு

இதற்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், நடிகர் சூரி, நடிகை நளினி, விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றது. அதன் பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மிஸ் திருநங்கை அழகிப் போட்டிக்கான தேர்வு நடந்தது.

இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2 ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2 ஆம் சுற்றுக்கான அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 5 பேர் 3 ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு

இவர்களில் மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுமிதா 2 ஆம் இடத்தையும், சென்னையை சேர்ந்த எல்சா 3 ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு 15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல்  2 ஆவது இடம் வந்தவருக்கு 10 ஆயிரமும், 3 ஆவது பரிசு 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு

விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி பேசுகையில், ருநங்கைகள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். நீங்கள் நல்லாயிருக்க வேண்டும். திருநங்கைகள் என்றாலே ஓடி ஒளிந்த காலம் மாறி தற்போது மிடுக்குடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களாக, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் மற்றும் நீதித்துறை, காவல்துறை, பேராசிரியர் என்று எல்லா துறைகளிலும் திருநங்கைகள் சாதித்து வருகிறார்கள். திருநங்கைகள் இல்லாத துறைகளே இல்லை. வேலூரில் ஒரு திருநங்கை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இப்படி திருநங்கைகள் வளர்ச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருநங்கைகளுக்கு யாரும் எதுவும் செய்யாவிட்டாலும் அவர்களை சுதந்திரமாக விட்டாலே போதும். அவர்களாகவே வளர்ந்து விடுவார்கள்.

பாரத கதையிலும் அரவான் இடம் பெற்றுள்ளார். திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். திருநங்கைகளை ஒதுக்கிய காலம் மாறிவிட்டது. திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர்கள், இனி எனது பிள்ளை ஒரு திருநங்கை என்று அவர்கள் கொண்டாடும் காலம் வெகு விரைவில் வரும். யாருக்கும் நீங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற உணர்வோடு முன்னேறி செல்லுங்கள் என அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget