திருப்பூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை,6.00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 198 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.40 அடியாக இருந்தது.
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு.
அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 198 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், வினாடிக்கு, 40 கன அடியில் இருந்து 25 கனஅடியாக காலை குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.40 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை:
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு, காலை, வினாடிக்கு, 879 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 876 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றல் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை:
க.பரமத்தி அருகே, ஆத்துப் பாளையம் அணைக்கு, காலை 6.00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.94 அடியாக இருந்தது.நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை:
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட,நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது.நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அழிவின் பிடியில் அமராவதி ஆற்றுப் படுகை
கரூர் அமராவதி ஆற்றில் தொல்லியல் துறை சார்பில் ஒரு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அமராவதி ஆற்றுப்படுகையை சேதப்படுத்தினாலோ, அகற்றினாலோ, அழிவுக்கு உட்படுத்தினாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதி, அதில் இருந்து 200 மீட்டர் வரை சின்னத்தின் அருகில் அல்லது சின்னத்தை சுற்றியுள்ள பகுதி முறையே சுரங்கப் பணி மற்றும் கட்டுமானத்திற்கு முறைப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரூர் நகருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்களுக்கும் பண்டைய காலத்தில் வியாபாரம் நடந்திருப்பதை இந்த நாணயங்கள் உணர்த்துகின்றன. பெருமை வாய்ந்த பண்டைய நாகரீகம், வியாபாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமராவதி ஆறும், அதன் படுகையும் இருப்பதால் தொல்லியல் துறை, அமராவதி ஆற்றப்படுகையை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் இந்த பதாகையை வைத்துள்ளது.
ஆனால், இந்த போர்டு வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பெரிய சிமென்ட் குழாய் மூலமாக நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. கழிவு நீரோடு பாலித்தீன் உள்ளிட்ட குப்பையும் குவிந்து காணப்படுகிறது அமராவதி ஆற்று படுகை திறந்த வெளி பலிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த அழிவுகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொல்லியல் துறை மவுனம் காத்து வருகிறது. பழமையையும் கரூரின் பெருமையையும் பாதுகாக்க தொல்லியல் துறை அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை கரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.