High Electricity Bills : திடீரென அதிகமாக வந்த மின் கட்டணம்.! இது தான் காரணம்.? மின்வாரியம் பரபரப்பு தகவல்
High Electricity Bills : மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோறுக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் அதிகரிப்பு - அலறிய மக்கள்
நவீன காலத்தில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.அந்த வகையில் சமையல் முதல் அனைத்து வகையான வேலைக்கு மின்சாரம் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதிலும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் ஏசியை அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக மின் கட்டணமானது பல மடங்கு அதிகரிப்பதால் மக்கள் நிதி சுமையால் தவித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தால் மற்றொரு பக்கம் மின் விசிறி மட்டுமே பயன்படுத்துபவர்கள் வீட்டில் கடந்த மாதம் 300 ரூபாய் வந்த மின் கட்டணம் இந்த மாதம் 800 ரூபாய் முதல் 1500 என வந்திருப்பது நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிலும் 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என அறிவித்த போதும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
பில்லிங் முறைகளால் பாதிப்பு
இந்த நிலையில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோறுக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கையில், மின்சாரத்துறையின் சில பிரிவுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் அசாதாரணமான பில்லிங் முறைகளால் பொதுமக்களுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார வாரிய தலைமை பொறியாளர் கூறியுள்ளார். மேலும் மீட்டர் கணக்கீடு அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு மின் ஒருவருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிதி சுமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன.?
இதற்கு காரணமாக மின்வாரிய அதிகாரிகளால் மதிப்பீட்டின் அடிப்படைக் கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் இடிசி மட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருந்து பிரச்சனை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாமல் பிரிவு அலுவலகத்திற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போன்ற பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் மேற் பார்வை பொறியாளர் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















