மேலும் அறிய

TN Heavy Rain: சென்னை...காஞ்சிபுரம்...திருவண்ணாமலை... அனைத்து ஏரிகளும் ‛ஹவுஸ்புல்’

தொடர்கன மழை காரணமாக செம்பரப்பாக்கம ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கபட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Heavy Rain: சென்னை...காஞ்சிபுரம்...திருவண்ணாமலை... அனைத்து ஏரிகளும் ‛ஹவுஸ்புல்’

சென்னையை பொறுத்தவரை தொடர்கனமழையால் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலையில் 247 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள 129 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 75 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 ஏரிகளும்அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.அதேபோன்று சென்னையில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழுகொள்ளவை ஏடியுள்ளது. ஆகையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Heavy Rain: சென்னை...காஞ்சிபுரம்...திருவண்ணாமலை... அனைத்து ஏரிகளும் ‛ஹவுஸ்புல்’

ஏரிகள் கொள்ளளவு விபரம்..

காஞ்சிபுரம் மாவட்டம் - 129 ஏரிகள் 100 சதவிகிதமும், 84 ஏரிகள் 75 சதவிகிதமும், 61 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன

செங்கல்பட்டு மாவட்டம் - 75 ஏரிகள் 100 சதவிகிதமும், 672 ஏரிகள் 75 சதவிகிதமும்,116 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம - 43 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும்,22 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 247 ஏரிகள் 100 சதவிகிதமும், 175 ஏரிகள் 75 சதவிகிதமும், 211 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 236 ஏரிகள் 25சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட முழு அளவை எட்டும் நிலை உள்ளது. புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியின் மொத்த நீர் மட்டம்: 21.20 அடி. இதில் தற்போது 19.30 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது. தற்போது விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனாடிஉபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஏரி கரையோரப் பகுதியில் வசிக்கும்  மக்கள் மேடான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
எது கெத்து... போதை பழக்கத்தில் சிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள் !
எது கெத்து... போதை பழக்கத்தில் சிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள் !
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
US Iran War: “ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
“ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
Top Diesel Automatic Cars: ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Embed widget