56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்

கடந்த 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஊழியருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ள கணபதி , தற்போது மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொறையார் என்ற ஊரின் ரேஷன் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.

FOLLOW US: 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் 28 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து அரசின் நியாய விலைக் கடைக்கு வேலைக்கு செல்லும் ஊழியர், தமிழக அரசின் ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் கடமையை செய்வதற்கு நெகிழ்ச்சிப் பயணம்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
மயிலாடுதுறை பெயர் பலகை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையே தன் வசப்படுத்தி மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் அன்றாட கடமையை செய்ய கூட தனி நபர் அச்சம் கொள்ளும் அளவிற்கு கொரோனாவின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய / மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்திய மக்கள் தொகையில் சராசரியாக 60 சதவீதம் பேர் வேலையை இழந்து, தொழில் முடக்கம் காரணமாக பொருளாதாரத்தை இழந்து வறுமையில் தவித்து வருகிறார்கள். அவர்கள் அத்துணை பேரும் அரசின் நலத்திட்டங்களையும் அரசின் நியாய விலைக் கடைகளையும் மட்டுமே நம்பி ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
சைக்கிளில் ரேஷன் கடைக்கு பணிக்கு செல்லும் கணபதி

இந்நிலையில், மக்கள் உயிரைக் காக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, ஊடகத்துறை என அனைத்து முன்களப் பணியாளர்களும் களத்தில் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். அதே நேரத்தில், மக்களுக்காக தன் வயதையும், கொரோனா வைரஸ் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தினம் 28 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து தன் வேலையை , வெறும் கடமை என்று பாராமல் மக்கள் சேவையாற்றி வருகிறார் கணபதி.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
ரேஷன் கடை பணியில் கணபதி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. 58 வயதான இவர் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஊழியருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ள கணபதி , தற்போது மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொறையார் என்ற ஊரின் ரேஷன் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
கொரோனா நிவாரண டோக்கன் வழங்கும் கணபதி

58 வயதான கணபதிக்கு கண்ணில் பார்வை குறைபாடு இருக்கிறது. இருப்பினும், அவர் தினமும் தனது இரு மகள்களின் துணையுடன் பேருந்தில் பயணம் செய்து பொறையாறு சென்று ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள பொது ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரட்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகளுக்காக பொறையாறு செல்ல வேண்டிய நிலை கணபதிக்கு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்க வசதியில்லாத கணபதி, கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பொறையாறு சென்று வருகிறார். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பும் இவர் 28 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பத்து மணிக்கு கடையை சென்றடைகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கிளம்பி 9 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தடைகிறார். சராசரியாக நாளொன்றுக்கு 56 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
சிறந்த அங்காடி விற்பனையாளருக்கான பாராட்டு கேடயம்

கடந்த ஆண்டு சீர்காழியில் பணியாற்றியபோது இதேபோல் தினமும் 40 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஓய்வுபெறும் வயதை நெருங்கிய இவர் சைக்கிளில் நீண்ட தூரம் பிரயாணம் செய்வது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் வலு இருந்தும், உழைக்க மறுக்கும் சிலருக்கு தள்ளாத வயதிலும் உழைத்து மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் கணபதியின் செயல் சிறந்த எடுத்துக்காட்டு.

Tags: tamil news positive story ration shop employee

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !