Today Rasipalan March 24: தனுசுக்கு நன்மை; மகரத்துக்கு நிதானம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan: மார்ச் 24ஆம் தேதி சனிக்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 24.03.2024 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். ஆசை மேம்படும் நாள்.
ரிஷபம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
மிதுனம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத் திறன் மேம்படும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
கடகம்
வாகன வசதிகள் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஜெயம் நிறைந்த நாள்.
சிம்மம்
வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி குறையும் நாள்.
கன்னி
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உயர் அதிகாரிகளால் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் சார்ந்த எண்ணம் மேம்படும். கலைத்துறைகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் சாதகமாகும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். உயர் கல்வியில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளியூர் சார்ந்த பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
கும்பம்
வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். சாந்தம் வேண்டிய நாள்.
மீனம்
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.