Ramar Pillai Petrol: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. இனி சுதந்திரமாக மூலிகை பெட்ரோல் விற்பேன் - ராமர் பிள்ளை!
எனக்கு கிடைத்த இந்த தீர்ப்பிற்காக இறைவனுக்கும். நீதி அரசர் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மூலிகை பெட்ரோல் தயாரித்து மிகவும் பிரபலமான ராமர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இனிவரும் காலங்களில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் சுதந்திரமான கண்டுபிடிப்புகளை வழிநடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
கடந்த 2000 ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனை அன்று சென்னை ஐஐடியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் சோதனை முயற்சி செய்து காட்டியுள்ளார் இதனைத் தோல்வி எனக் கருதி அன்று ஐஐடி விஞ்ஞானிகள் அறிக்கை கொடுத்ததாகவும், அதை எடுத்து சிபிஐ தவறான வழிமுறைகளை பயன்படுத்தி மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் ராமர் பிள்ளை என்பவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர் நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதில் ராமன் என்பவர் மீது சிபிஐ சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மற்றும் பணத்திற்கு 23 ஆண்டுகாலம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் , ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் இன்று வரை என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் உபகரணங்கள் எதுவும் சிபிஐகள் திருப்பித்தரவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் இந்த வழிமுறையின் கேட்டு எனது குடும்பத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் கடந்த 23 ஆண்டு காலமாக கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பிற்கும் பிறகும் என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பணமும் இதுவரை கொடுக்கவில்லை எனவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் தீர்வு காண வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் இந்த ஜட்ஜ்மெண்ட்டை பார்க்க வேண்டும் இல்லை என்றால் நான் வெளியே சொன்னால் இந்தியாவின் மானம் போய் விடும். உலக நாடுகளில் 36 ரூபாய்க்கு தான் பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில்தான் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீதிமன்றம் சொல்லி விட்டது. அவர் பொருளை அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று உண்மையை உண்மை என்று சொல்ல 23 வருடங்கள் நான் போராடி உள்ளேன் பல வழக்குகளை சந்தித்து நான் நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டது.
நான் எனது இரு கரம் துக்கி உங்களை மன்றாடி கேட்கிறேன், எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து உள்ளது. நான் நிரூபிக்க தவறிவிட்டால் நீங்கள் என்னை என்னவேண்டும் என்றால் பண்ணுங்கள். என் வெற்றி பின்னால் என் அப்பா அம்மா இருந்தாங்க என்று கண்ணீர் விட்டு அழுதார். என்னிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் மூலிகை பெட்ரோல் தயாரித்து குறைந்த விலைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் சுதந்திரமான கண்டுபிடிப்புகளை வழிநடத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்