TN Rain: தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எப்போது தெரியுமா..?
தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக, வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ( மார்ச் 6, 7 ) ஆகிய நாட்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது
இதையடுத்து, வரும் 8 ஆம் தேதி, தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 5, 2023
சென்னை:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியல் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, இந்திய வானிலை மையத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும். Home | India Meteorological Department (imd.gov.in)