அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னிக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. pic.twitter.com/TAPuWczc21
— TN SDMA (@tnsdma) November 27, 2021
முன்னதாக, குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரகை்கால் பகுதிகளிலும் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக இன்று குமரி, தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை 58 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 70 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைப் பொழிவு 96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகம் ஆகும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்