" தண்டலம் அனுகிரகம் அவென்யூ விரிவில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு "
By : கிஷோர் | Updated at : 13 Feb 2024 01:56 PM (IST)
பொதுமக்கள் குற்றச்சாட்டு ( File Photo)
7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவில் பகுதிவாசிகள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பாலாஜி தெரு, பத்மாவதி தெரு, அலமேலு தெரு மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4 தெருக்களை உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும், வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.
இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாவுதாகவும் தெரிவிக்கின்றனர். சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.