Pudukottai holiday: கனமழை எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக்டோபர் 10) விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கன மழை பெறும் மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 26 மாவட்டங்களில் நாளை அக்டோபர் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்-மிக கன மழை
கனமழை எதிரொலி காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களுக்கு, இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில், இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
View this post on Instagram
இந்நிலையில், கனமழை எதிரொலியால் புதுக்கோட்டை மாவட்டத்தில்,( நாளை )அக்டோபர் 10 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Also Read: மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,505 கன அடியில் இருந்து 12,689 கன அடியாக குறைவு
Also Read: சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நிர்ணயம் - கரூர் மாவட்ட ஆட்சியர்